எம்பிரான் அமர்நீதி நாயனார் கோயில்

 

திருநல்லூர் | தஞ்சை | தமிழ்நாடு

அமர்நீதி நாயனார் திருமடம் புதுப்பித்தல்

கால அளவு: 12 மாதங்கள்

செலவு: ₹ 21, 00, 000

பிப்ரவரி ‘23: அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார்.

7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

அவருடைய திருமடம் அமைந்த இடமே கோயிலாயிற்று. இக்கோயிலை அமர்நீதி நாயனார்த் திருமட அரங்காவலர்க் குழுவினர், வழிபடுவதற்குத் தக்க ஏற்பாடுகளைத் செய்தனர், நமது கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் திருவருள் குருவருள் கூட்டிவைக்க மடம் முழுமையையும் புதிதாக கோயிலாக அமைத்து கருங்கல்லினால் மேடை அமைத்து, தூண் நிறுத்தி, விமானம், பெரிய மண்டபம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அத்திருமடத்தின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 08-02-2023 அன்று காலை 9 மணிக்கு

☘️ திருக்கயிலாய பரம்பரை, வேளாக்குறிச்சி ஆதீனம், 18வது குருமகா சன்னிதானம், திருப்புகலூர்

சீர்வளர்சீர் சத்திய ஞான மகாதேவா தேசிக பரமாச்சாரிய சாமிகள் அவர்கள் ☘️

☘️ திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம்

சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சாமிகள் அவர்கள் ☘️

☘️ சென்னை தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத் தலைவர்

அருட்குருநாதர் ஒளியகம் ந.ஒளியரசு ஐயா அவர்கள் ☘️

ஆகியோர் தலைமையிலும், சிவனடியார்கள் முன்னிலையிலும் மற்றும் ஊர்மக்கள் புடைசூழ நடைநடைபெற்றது .

டிசம்பர் ‘22: திருநல்லூர் எம்பெருமான் அமர்நீதி நாயனார் திருமடம் சுண்ணாம்பு பூச்சு (ஒயிட் washing) பணிகள் நடைபெறுகிறது.

அக்டோபர் ‘22: திருநல்லூர் எம்பெருமான் அமர்நீதி நாயனார் திருமடம்

1.பூச்சு வேலை பணிகள்

2. விநாயகர் சன்னதி அமைக்கும் பணி

3. பிளம்பிங் பணிகள்

4.ஜன்னல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது

செப்டம்பர் ‘22: சுற்று சுவர் கட்டுமான பணிகள் - Lintel Beam concrete பணிகள்

ஜூலை ‘22: அமர்நீதி நாயனார் திருமடத்தில் கட்டுமான பணிகள்

ஜூலை ‘22: திருமடத்தின் அஸ்திவார பணிகள்

ஜூலை ‘22: முதற்கட்டமாக மடத்தின் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

ஜூலை ‘22: நம் திருநாவுக்கரசு பெருமானுக்கு திருவடி தீக்கை கொடுத்தருளிய தலமாகவும், அமர்நீதி நாயனாருக்கு முத்தி கொடுத்த தலமாகவும், எம்பிராட்டி மங்கையர்க்கரசியார் வழிபட்ட தலமாகவும், விளங்க கூடிய திருநல்லூர் திருத்தலத்தில் உள்ள அமர்நீதி நாயனார் மடம் சிதலமடைந்த நிலையில் இருந்து வந்தது, திருவருள் மற்றும் எம்பிரான் அமர்நீதி நாயனார் குருவருளும் கூட்டி வைக்க நமது அரன்பணி அறக்கட்டளை மூலம் திருமடத்தை ரூபாய் 21 இலட்சங்கள் செலவீட்டில் புதுப்பிக்கவுள்ளோம். இன்றைய தினம் 13/07/2022 அன்று குருவருளும் திருவருளும் முன்னின்று அருள்செய்ய திருப்பணிகள் தொடங்கப்பட்டது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > கமலை ஞானப்பிரகாசர் கோயில்