கமலை ஞானப்பிரகாசர் கோயில்

 

சாந்தமங்கலம் | மடப்புரம் | திருவாரூர் | தமிழ்நாடு

கமலை ஞானப்பிரகாசர் கோயில் கட்டுதல்

கால அளவு: 12 மாதங்கள்

செலவு:

பிப்ரவரி ‘23: இன்றைய தினம் 01-02-2023 திருவாரூர் கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயில் குடமுழுக்கு, திருக்கயிலாய பரம்பரை தருமையாதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானங்கள் மற்றும் வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் முன்னர் நடைபெற்றது.

உடன் வேளாக்குறிச்சி ஆதீனம் இளவரசு சாமிகள் மற்றும் திருப்பனந்தாள் ஆதீன இளவரசு சாமிகள் கலந்துக்கொண்டனர்.

ஜனவரி ‘23: கும்பாபிசேகம் 01-02-2023 நடைபெறவுள்ளது, திருக்கோயில் கலசங்கள் 30-01-2023 அன்று நிறுவபெற்றது 

டிசம்பர் ‘22: பூசை மடாலயம் பிரைமர் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது

செப்டம்பர் ‘22: பூசை மடாலயம் பிரைமர் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது

ஆகஸ்ட் ‘22: குரு மூர்த்தம் பூசை மடாலயம் சுவர் கருவறை முகப்பு பூச்சு வேலைகள், தூண் பணிகள் மற்றும் உருவ பொம்பை அமைக்கும் பணிகள்.

ஜூலை ‘22: குரு மூர்த்தம் பூசை மடாலயம் சுவர் கட்டும் பணி மற்றும் முகப்பு கட்டுமான பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றது

ஜூன் ‘22: கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயிலின் குரு மூர்த்த கருவறை கட்டுமான பணிகள்

ஜூன் ‘22: கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயிலின் பணிகள்

மே ‘22: கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயிலின் மேல்தளம் கான்கிரிட் பணிகள்

ஏப்ரல் ‘22: கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயிலின் கட்டுமான பணிகள்

மார்ச் ‘22: கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயிலின் அஸ்திவார பணிகள் மற்றும் பில்லர் உயர்த்தும் பணிகள்

மார்ச் ‘22: குருமூர்த்த திருப்பணிகள் திருவாரூர் இராஜன் கட்டளை கமலை ஞானப்பிரகாசர் சமாதி மூர்த்தம், பூசை மடாலய பாலாலய விழா, 06/03/2022 அன்று தருமையாதீன தென்மண்டல கட்டளை விசாரனை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைத்தார்கள்

ஜனவரி ‘22: திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்த சாமிகளின் ஆசிரியபெருமனார் கமலை ஞானப்பிரகாசர் சமாதி மூர்த்தம் கோயில் திருப்பணியை அரன்பணி அறக்கட்டளை மூலம் செய்ய திருவருளும் குருவருளும் கூட்டியுள்ளது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > கமலை ஞானப்பிரகாசர் கோயில்