![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/a2ace05e-639e-4044-919e-6aa8f517d816/WhatsApp+Image+2023-03-20+at+4.58.27+AM.jpeg)
தோணியப்பர் ஆலயம்
கோயில் சீமை | உடையார்பாளையம் | அரியலூர் | தமிழ்நாடு
கோயில் கட்டுதல்
கால அளவு: 5 மாதம் (மதிப்பீடு)
பிப்ரவரி ‘23: திருக்கோயில் கட்டுமான பணிகள்
ஜனவரி ‘23: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, கோயில் சீமை என்ற ஊரில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் நீர்நிலை அருகில் அண்ணாதுரை சோதிடர் மற்றும் ஊர் மக்கள் ஒரு சிவலிங்க திருமேனியை கண்டு எடுத்துள்ளனர். அத்திருமேனியை ஊரில் உள்ள ஒரு பஜனை மடத்தில் வைத்து வழிபட்டு வந்துள்ளனர் அரசின் பதிவேட்டில் இத்திருமேனியின் பெயர் தோனியப்பர் என்றும் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருமேனி என்றும் தெரியவந்துள்ளது.
ஊர் மக்கள் கோயில் கட்ட முயற்சி செய்து அடித்தளம்(Basement) வரை கட்டியுள்ளனர், அதற்கு மேல் அவர்களால் திருப்பணி செய்யமுடியாமல், 4 ஆண்டுகளுக்கு மேல் திருப்பணி தடைபெற்று நின்றுள்ளது.
நமது அரன் பணி அறக்கட்டளை மூலம் திருக்கோயில் முழுமையாக கட்டிக்கொடுக்க திருவருளும் குருவருளும் கூட்டியுள்ளது.
பெருமான் கருணையால் விநாயகர், சுவாமி, அம்மை, முருகன், சண்டீசர் சந்நதிகள் கட்டப்படவுள்ளது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/9dc32782-8d82-4d7b-9ce5-035ec36f49d3/WhatsApp+Image+2023-01-13+at+3.25.17+PM.jpeg)