விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் ஆலயம்

 

நறு(டு)வெளி | கதிராமங்கலம் | தஞ்சை | தமிழ்நாடு

கால அளவு: 4 மாதங்கள்

செலவு: ₹ 6, 00, 000

செப்டம்பர் ‘21: கோயில் புணரமைத்தல் முடிவுற்று குடமுழுக்கு நடைபெற்றது

ஆகஸ்ட் ‘21: சுற்று மதில் அமைக்கும் பணி மற்றும் திருக்கோவிலுக்கு வர்ணம் அடிக்கும் பணி நடைபெறுகின்றது

சுற்று மதில் அமைக்கும் பணி

சுற்று மதில் அமைக்கும் பணி

சுற்று மதில் அமைக்கும் பணி

வர்ணம் அடிக்கும் பணி

வர்ணம் அடிக்கும் பணி

வர்ணம் அடிக்கும் பணி

ஜூலை ‘21: இறைவர் சன்னதி, அம்மை சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன. நந்திக்கு மேடை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது


ஜூன் ‘21: இறைவர் சன்னதி, அம்மை சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன


ஏப்ரல் ‘21: தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள நறுவெளி என்ற ஊரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் பழுதாகி இருப்பதாக நமது அன்பர்கள் வாயிலாக தெரியவந்தது. அங்கு சென்று கண்ட சமயம், அவ்வூர் மக்கள் அவ்வாலயத்தில் திருப்பணி துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும் பாலாலயத்திலே சுவாமி இருக்கிறார்… திருப்பணிகளை மூன்று முறை துவங்கி நின்றுவிட்டது என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளை நடாத்தித் தரவேண்டும் என்றும், அப்பணியிலே தங்களையும் இணைத்துக்கொள்வதாயும் தெரிவித்தார்கள். அதன்படி அரன்பணி குழு இப்பணிக்கு ஒப்புதல் அளித்து திருப்பணிகளை துவக்கினோம். இறைவர் சன்னதி, அம்மை சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகியவற்றை அரன்பணி ஏற்றுகொண்டது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > விஸ்வநாதர்